நீ வந்து போன வாசனை நெஞ்சோடு

இமைக்காது விழித்தேன் - நான் இரவுகளை தொலைத்தே பேசாது மௌனித்தேன் - நான் கெஞ்சல்களை ரசிச்தே

இரவல்கள் வாங்கினேன் - நான் இதயத்தை தொலைத்தே நூலகம் மறந்தேன் - நான் அவள் நூலியிடை ரசித்தே

கருமேகம் சந்திப்பில் - நான் கார்கூந்தல் ரசித்தேன் விண்மீனை விலைபேசி - நான் அவள் கரும்புள்ளி மச்சங்கள் ரசித்தேன்

நதிசேரும் பாலமாய் - நான் அவள் விழியிமை ரசித்தேன் பிரமிடுகளின் அதிர்வில் - நான் முன்கோபுரங்களின் அழகை ரசித்தேன்

ஒவ்வொரு பக்கமாய் - நான் பக்குவமாய் படித்தேன் என்னை இழந்தே - நான் பாவையவளை செதுக்கினேன்

தேரோடும் பாதையில் - நான் தெருவிளக்காய் காத்திருந்தேன் அணை கடந்த வெள்ளமாய் - நான் உன் குரல்தேடி அலைகிறேன்

வறண்ட நிலத்தில் பூத்த மலராய் வாடுகிறேன் - நான் நீ வந்து போன வாசனை நெஞ்சோடு ஒவ்வொரு நாழிகையும் வருவாய் நீயேன - நான் தூக்கத்திலும் விழித்திருக்கிறேன்.

அனுகவி றிப்கான், அட்டாளைச்சேனை - 06

கருத்துகள்