[products]
என் ஜீவிதத்தில் நீயொரு சிற்பியானாய்! உளியாய் உள்ளிறங்கிய வலிகள் உனக்காய் எனும் போது ஏனோ இதமாய் இனித்தது!
உன் கைத்தேர்ந்த செதுக்கலில் உருப்பெற்றவள் தான் எனினும் என்னை மீண்டும் செதுக்குகிறேன் பித்துக்குளியாய் பழைய நினைவிழந்து...
அனிச்சையாய் வாடுவதும் அழுது கரைவதுவும் நீங்கி அவதாரம் எடுக்கிறேன் உன்னைப் போல் வேசமிட்டு நாளொரு பொழுதும் அன்பைப் புதைத்து!
கண்ணகி கண்ணீரால் மதுரையும் எரிந்தது! புகாரும் உட்புகுந்தது! உன் நலம் எண்ணி விழி நீர் மறைத்து புன்னகையை அணிகிறேன் மேலாடையாய்...
நஸீரா பின்த் ஹஸன்
கருத்துகள்
கருத்துரையிடுக