போரிடும் உலகை சாய்ப்போம் நாம்

போரெனும் கொடியின் கீழ் களி கொள்ளும் கயவர்களின் கோரப்பிடியில் சிக்காது சாதி மத பேதமற்ற சாந்தியான வாழ்வுதனை சாத்தியமாக்கிடவே துணிந்து வா மனிதா!!

ஆயுத ரகங்கள் நீ தரித்து யுத்தம் பல எதிர் கொண்டு உயிர்கள் பல துறந்திங்கு கறுப்புப் பதிவு - வேண்டாம் இனியும் நம் வாழ்வினிலே!

நாடு பிடிக்கும் கொள்கையதில் நயமாய் நீ வென்றிடவே போரெனும் பேராபத்தை பொடுபோக்காய்ச் செய்கின்றாய்!

அரசியல் இலாபமதை அளவின்றிப் பெற்றிடவே அரசியல் அரங்கிற்குள் அச் சமரைப் புரிகின்றாய்!

இன - மத பேதமின்றி இணைந்து வாழும் உலகமதில் இன்பங்களைத் துறந்திங்கு போரெனும் கேட்டை நீ போற்றுதலோடு பார்க்கின்றாய்!

நிரந்தரமில்லா இவ்வுலகில் நிம்மதியாய் நாம் வாழ நிறுத்திடுவோம் போர்தனை - என்றும் அறுத்திடுவோம் பகைமைதனை

பட்டம் பதவி புகழுக்காய் போரிடும் இவ்வுலகில் பாமரர் பலருக்கும் புரிந்திடுவோம் - பல் பணிகள்

ஒரு தாய் மக்களென ஒற்றுமையங்கு தலைத்தோங்க நாடெனும் இல்லமதில் நம்பகமாய் நாம் வாழ போரெனும் விருட்சத்தை சாய்த்திடுவோம் வேருடனே!

J.Noorul Shifa SEUSL

கருத்துகள்