மனநிம்மதி

அகமெனும் மனையதிலே நிம்மதியெனும் ஒளிக்கீற்றை நிரந்தரமாய் - நீ பெற்றிடவே புரட்டிடு குர்ஆனதை புரிந்திடுவாய்-பல்லுண்மைகளை!

கண்காணா சுவனமதின் சுவாரசியங்கள் - உன்னைக் கவர களியாட்ட நிகழ்வுகளும் கரைந்து விடும் - அந்நொடியில்

சோதனைகள் பல சுமந்திங்கு சாதனைகள் பல புரிந்திட்ட சத்திய தூதர்களின் வரலாற்றை சற்றே நீ மீட்டிட்டால் சளிப்பாய் - உன் சோதனையை "இதுவல்ல தோதனையென்று" தாழ்ந்தோனின் நிலை கண்டு தயாளனைப் புகழ்ந்தங்கு தாம் பெற்ற அருளுக்காய் நன்றிகள் பல நவில்ந்திட்டால் அடைவாய் - நீ நிம்மதியை!

பார்ப்போர்க்காய் என்றன்றி படைத்தவனுக்காய் என்றாகி தொடர்ந்திட்டால் வேலைகளை தொட்டிடலாம் - நிம்மதியை!

பாரமான உள்ளமதை பொறுப்பாளன் அல்லாஹ்விடம் பொறுமையுடன் சாட்டிட்டால் பெறுவாய்-நீ நிம்மதியை!

"அல்லாஹ்வை நினைவு கூர்வதன் மூலமே இதயங்கள் அமைதி பெறுகின்றன என்பதை அறிந்து கொள்க" (13:28)

J.Noorul Shifa (SEUSL)

கருத்துகள்