மின்னலின் வெட்கம் நீ

தென்றலாய் நுழைந்தாய் இதயத்தின் வாசலில் தெரிசம் நிறைந்த ஏகாந்தம் சூழ்ந்த வாழ்வில் நீ பௌர்ணமி நிலவாய் ஒளியூட்டி நகர்ந்தாய்...

அதரத்தால் வழியே சிறுபுன்னகை செய்தே சிறைப்பிடித்து சென்றாய் அகிலம் நீயேன அடம்பிடித்துக் கொண்டிருந்தேன் அக்கறை மிகுந்ததில்...

அனவரதம் உன்னைக்காண விழிமேல் விழிவைத்துக் காத்திருந்தேன் அடலை சூழ்ந்தபோதும் பேதை உன்னை மறந்திட தெரியவில்லை ஆழ்மனதிற்கு...

ஆகாரம் தேடி அழுதிடும் மழலைப்போல உகிர் சுவைத்து உமிழ்தலின் போது பேரழகி நீயே...

மடந்தை வயதில் வங்கணம் நுழைந்ததில் தையல் உன்னை தைத்திட்டேன் தேகத்தோடு...

வறண்ட நிலத்தினில் துமி மழைக்கண்டு துளிர் விடும் பயிராய் உன்மத்தம் ஆகுதடி...

நோக்கிடும் வேளையில் வேர்விடும் உன் வெட்கம் மின்னலாய் நெஞ்சை கீறிக்கிழிக்குதடி மோகம் தேகத்தில்...

அனுகவி றிப்கான் அட்டாளைச்சேனை-06

கருத்துகள்