முந்திய ஸுன்னத்தை தவிர்த்து தஹிய்யதுல் மஸ்ஜிதை அமுல்படுத்துவோம்!

ஜூம்ஆ நாளன்று பகல் பாங்கு கேட்டதும் ஜும்ஆவிற்கு முன் ஸுன்னத் தொழுகை இருப்பதாக நினைத்து அனேகர் தொழுது வருவது தவிர்க்கப்பட வேண்டியதாகும்.

பள்ளியில் நுழையும் போது தஹிய்யதுல் மஸ்ஜித் தொழுகை குத்பாவுக்கு முன்னரும், குத்பா வேளையிலும் தொழுவதுடன் இமாம் வரும் வரை நபிலான தொழுகை எவ்வளவும் தொழ முடியும், ஆனால் முந்திய ஸுன்னத் என்று ஒன்று குறித்த நேரத்தில் இல்லை என்பது ஹதீஸின் நிழலில் அறிய முடிகிறது.

எவ்வாறு அஸ்ருக்கும், ஸுப்ஹுக்கும் பிந்திய ஸுன்னத் தொழுகை இல்லயோ அவ்வாறே ஜும்ஆவுக்கு முந்திய ஸுன்னத் இல்லை. ஆனால் தஹிய்யதுல் மஸ்ஜித், இமாம் வரும் வரை இயன்றளவு நபிலான தொழுகைகள் மற்றும் பிந்திய ஸுன்னத் ஆகியவை மாத்திரமே இங்கு அனுமதிக்கப்பட்ட நபிவழியாகும்.

மார்க்கத்தில் உள்ளதை உள்ள படி செய்து இல்லாதவற்றை தவிர்த்து நடக்க முயல்வோம்.

அஸ்ஹான் ஹனீபா

கருத்துகள்