விடுதலை வேண்டும்

உன் விம்பங்கள் விழுந்து பார்வைகள் பறிபோகும் அந்த விழிகளுக்கு விடுதலை வேண்டும் பெண்ணே!

மரணத்தை தூண்டும் உன் மௌனங்களுக்கும் விடுதலை வேண்டும் மௌனத்தை தாண்டிய என் மொழிகளுக்கும் விடுதலை வேண்டும்

நான் எதிர் நோக்குகின்ற நிமிடங்கள் எல்லாம் நிலையற்றதுதான் உன் நினைவுகளால் அவை உறுதியற்று போகிறதே உன் நினைவுகளுக்கும் விடுதலை வேண்டும்

தூக்கத்தை கலைக்கின்ற துன்பங்களோடு தூரளாய் வந்து நனைக்கின்ற அந்த இன்பங்களுக்கும் விடுதலை வேண்டும்

உன் எதிரில் சிறைப்பட்டு சிதறுன்டு வாழும் என் காதலுக்கு விடுதலை தந்து விடு பெண்ணே விழி மூடி போகும் முன் வலி தீர்த்திடும் வழி தேடி தவிக்கிறேன் நான் !!!

ஐ. எம்.அஸ்கி கவியிதழ் காதலன் அட்டாளைச்சேனை -08

கருத்துகள்