இறையோனின் இல்லமதில் பாங்கோசை குரலதிலே லயித்த எம்முள்ளம் - அன்று இசையெனும் சதிவலையில் சாத்தானின் தூண்டுதலில் சரிவதுதான் ஏனோ? - இன்று
ஸஹாபாக்கள் பலரதின் பண்பான சரிதையதில் பூரித்த எம்முள்ளம் - அன்று சினிமா நடிகர்களின் சீர்கெட்ட காட்சிதனில் மூழ்குவது ஏனோ? - இன்று
மாலை உதயமதில் மறையைப் புரட்டிட விரைந்த உள்ளம் - அன்று மஃரிப் ஆனதும் சீரியல் பக்கம் செல்வது ஏனோ?- இன்று
கூட்டான வாழ்வுதனை கூடியே வாழ்ந்த நாம் - அன்று தனிமையெனும் பாதையதை தேடியலைவதுதான் ஏனோ? - இன்று
பணம் செய்த சூழ்ச்சியா இது? - இல்லை நாகரீத்தின் மோகமா இது?
சற்றே நாம் மீட்டிடுவோம் சரித்திர வரலாற்றை!
கருத்துகள்
கருத்துரையிடுக