[products]
"நயோமி இருக்கிறதை அறிவிக்குற அம்புக்குறி இது." என்றாள் அலைஸ். அவள் உள்மனசு சொல்லியிருக்க வேண்டும்.
"அப்போ அவங்க இங்கதான் எங்கேயோ பக்கத்தில் இருக்காங்க."என்று ரியூகி சொல்லி கொண்டு இருக்கும் போதே கோரின் வந்து அலைஸிடம்
"சீக்கிரம் புறப்படுங்க. நயோமி ஆபத்தில் இருக்கா." என்று சொல்ல கியோனும் சோஃபியும் கூட அங்கு வந்து விட்டனர்.
"என்ன இது இவ்வளவு பயங்கரமான சத்தமா இருக்கு." என்று சோஃபி காதை பொத்தியபடியே சொல்ல எல்லோரும் அவளை பார்த்தனர்.
"என்ன ஒளர்ர ?"
"ஐயோ இந்த சத்தத்தை என்னால தாங்கவே முடியல்ல." என்று சோஃபி அலறினாள். கோரின் உடனே சற்று நேரம் கண்களை மூடி ஏதோ சொல்லிவிட்டு,
"கிளம்புங்க. கியோன் நீ சோஃபி கூட இங்கேயே இரு."என்று சொன்னாள்.
அவள் காட்டிய திசையில் இவர்கள் குதிரையில் ஏறி பயணிக்க சற்று தொலைவில் நயோமி ஒரு பெரிய ட்ராகனுடன் சண்டையிடுவதை கண்டனர். இவர்கள் தூரத்தில் வருவதை கண்டு யாரென அறியாமல் ,
"இங்கு வராமல் போய்டுங்க..." என்று எச்சரித்தாள்.
குதிரைகள் நெருங்க நெருங்க கோரினை அடையாளம் கண்டு கொண்டாள். அதற்குள் அந்த ட்ராகன் அவளை தன் சக்தியால் தாக்க,
"அக்கா..!" என்று அழைத்து கொண்டே நயோமி மயங்கி விழுந்தாள்.
அவளை கோரினும் அலைசும் சென்று தூக்க ரியூகியும் சின் கேவும் இணைந்து ட்ராகனை தாக்கினார்கள். ட்ராகன் பல துண்டுகளாக சிதறி இறந்தது. அருகில் இருந்த நயோமியின் வீட்டிற்கே அவளை தூக்கி சென்றனர்.
**********************
"இப்போதான் அந்த சத்தம் அடங்கி இருக்கு." என்றாள் சோஃபி.
"நல்லதா போச்சு." என்ற கியோன் ரியூகி அவர்கள் காதல் பற்றி அறிந்து கொண்ட விடயத்தை அவளிடம் சொன்னான்.
"என்ன? அண்ணன் என்ன சொன்னான்?"
"உன்னை வேற யாருக்கோ கட்டிக்கொடுக்க போறானாம். உன்னை விட்டு விலகி இருக்க சொன்னான்." என்றான்.
"ஐயையோ இப்போ என்ன பண்ணுறது?"
"நிஜமாவே கவலைபர்ரியா இல்ல... நடிக்குறியா?"
"போடா... எப்பவுமே உனக்கு கிண்டல் தான்."
"ஹே பேசாம ஒன்னு பண்ணலாம் அவங்க எல்லோரும் வர்றதுக்குள்ள இங்கிருந்து ஓடிப்போயிடலாம்." என்றான்.
"அருமையான ஐடியா. ஆனா ரியூகி நம்ம ரெண்டு பேரையும் தேடி கண்டுபிடித்து கொன்னுடுவான். அது தேவையா?"
"சும்மா தமாசுக்கு சொன்னேன். அவன் ஓகே சொல்லிட்டான்." என்றான் கியோன்.
"நெஜமாவா?"
"சத்தியமா டி"
"வாவ்.. எனக்கு வர்ற சந்தோசத்தில் உன்னை" என்று கட்டியணைக்க வந்தவளை தடுத்து,
"உன் அண்ணன் கிட்ட அடிவாங்க நான் ரெடி இல்லம்மா" என்றான். இருவரும் கலகலவென சிரித்தனர்.
**********************
நயோமி மயக்கத்தில் இருந்து எழுந்த போது அலைசும் கோரினும் அருகே இருந்தனர்.
"உனக்கு ஒன்னும் ஆகலியே!"என்று இருவரும் கேட்டனர்.
"கோரின்…. ஆஹ்… இது யாரு."
"இவ நம்ம தங்கை அலீஸியா... நயோமி... நீயும் நானும் தேடிக்கிட்டு இருந்த நம்ம தங்கை" என்று கோரின் சொன்னதும்,
ஆச்சரியத்தில் ஆனந்தத்தில் அவளை கட்டிப்பிடித்து மகிழ்ந்தாள். ஆனால் இவர்கள் இருவரும் எப்படி ஒருவருக்கொருவர் அறிந்து வைத்துள்ளார்கள் என்ற கேள்வி அலைசை யோசிக்க வைத்தது.
"ஆமா உங்களுக்கு எப்படி ஒருத்தருக்கு ஒருத்தர்…"
"அது ஒரு பெரிய கதை."என்றாள் நயோமி.
"இந்த ஊருல நடந்த ஒரு போட்டிக்கு நாங்க ரெண்டுபேரும் வெவ்வேறு அணியில் இருந்து வந்திருந்தோம். அப்போ எங்களுக்கு ஆளுக்காள் யாரென்னே தெரியாது. அப்பறம் சண்டையில் ஒருவரை ஒருவர் தொடும்போது தான் தெரிஞ்சிகிட்டோம்." என்று சொல்லி கொண்டு இருக்க ரியூகி வந்து,
"அங்க ரெண்டுபேர் தனியா இருக்காங்க.. நாம தாமதிக்காமல் போறது நல்லது" என்றான். எல்லோருமாய் புறப்பட்டனர். போகிறவழியில் நடந்த சம்பவம் அனைத்தையும் அலைஸ் சொல்லி கொண்டே வந்தாள்.
தொடரும்……
ALF. Sanfara.
<!-- wp:paragraph --><!-- /wp:paragraph -->
<!-- wp:paragraph --><!-- /wp:paragraph -->
<!-- wp:paragraph --><!-- /wp:paragraph -->
<!-- wp:paragraph --><!-- /wp:paragraph -->
<!-- wp:paragraph --><!-- /wp:paragraph -->
<!-- wp:paragraph --><!-- /wp:paragraph -->
<!-- wp:paragraph --><!-- /wp:paragraph -->
<!-- wp:paragraph --><!-- /wp:paragraph -->
<!-- wp:paragraph --><!-- /wp:paragraph -->
<!-- wp:paragraph --><!-- /wp:paragraph -->
<!-- wp:paragraph --><!-- /wp:paragraph -->
<!-- wp:paragraph --><!-- /wp:paragraph -->
<!-- wp:paragraph --><!-- /wp:paragraph -->
கருத்துகள்
கருத்துரையிடுக