இதுவரை காணாத...

இதுவரை காணாத இருளில் தடுமாறிக் கொண்டிருக்கிறது தரணி கண் காணாத சிறு புள்ளியால் சிதறி போயிருக்கிறது சிம்மாசனங்கள்

இன,மத, மொழி நிற பேதமின்றி உயிர்கள் ஒன்றே என்பதை உலகுக்கு உறைத்துள்ளது

அற்ப இன்பங்களில் இளைப்பாறிக் கொண்டிருந்த இதயங்களை தட்டி எழுப்பியுள்ளது சத்தியத்தை நோக்கி

அகிலம் அழிந்து போகக் கூடிய நிதர்சனத்தை மீண்டும் ஒரு முறை நினைவுபடுத்தியுள்ளது - கொரோனா

ஆபத்தை எதிர் கொண்டோருக்காக இறைவனிடம் இறைஞ்சுவோம் இருகரம் ஏந்தி

உள்ளத்தை உலுக்கி படிப்பினைப் பெற்று படைத்தவன் பக்கம் பணிந்திடுவோம்!

Rushdha Faris SEUSL

கருத்துகள்