கண்காணா வைரஸதை கணப்பொழுதில் பரவச் செய்து கருணையாளன் உணர்த்திட்டான் கற்றுணர பல் பாடமதை!
முகத்திரை வேண்டாமென்று அகற்ற சொன்ன உலகமது-அதை அணியாது வீட்டை விட்டு வெளியேறா என்று சொல்லும் தருணமிது ஜீரணிக்க முடிகிறதா??
ஒருவர் செய்த செயலுக்காய் ஓர் சமூகமே குற்றவாளிக் கூண்டதனில்-அன்று ஒடுக்கிய பலருக்கு ஓரிறைவன் உணர்த்திட்டான் உண்மையான நிலவரத்தை-இன்று
சுத்தமெனும் ஸுன்னாவை போதித்த இஸ்லாமது-இன்று சுகாதார மேம்பாடாய் சுழல்கிறது-உலகமதில்...
அருள்மிகு மார்க்கமதை நமக்களித்த இறையோனிற்கு அளித்திடுவோம் நன்றி பல அடைந்திடுவோம் அவனன்புதனை!
இறைவன் விதித்த விதியெதுவோ அதுவே எமை வந்தடையும் அவன் நாட்டம் ஏதுமின்றி நகர்ந்திடுமா அணுவளவும்??
சாந்திமிகு மார்க்கமதின் சத்திய தூதனை சக இனத்தார்க்கும் பகிர்ந்திடும் தருணமிது!
உணர்ந்திடு உன் கடமை! செயல்படு அவன் வழியில்!
"துஆ முஃமினின் ஆயுதமாகும்"
கருத்துகள்
கருத்துரையிடுக