கவிதை தினமாமின்று பங்குனியின் பதிப்பில்.. கவிஞர்கள் மடிந்திருக்கலாம் ஆனால் கவிதைகள் வாழ வைக்கிறது..
வாழ்த்தப்பட வேண்டியது இலக்கியவாதிகள் மட்டுமல்ல... இலக்கியத்திற்கு இலக்கணம் கொடுப்பவர்கள் கவிஞர்கள் அதற்கு உயிர் கொடுப்பது வாசகர்கள்.
வாசிக்கத் தெரிந்தால் மட்டும் போதாது கொஞ்சம் ரசிக்கவும் தெரிந்து கொள்வோம். யோசிக்க தெரிந்தால் மட்டும் போதாது கொஞ்சம் நேசிக்கவும் தெரிந்து கொள்வோம்.
இயற்கை சொல்லும் கவிதைகளிற்கு ஈடில்லை எதிலும். ருசிக்கத்தெரிந்தால் பாவற்காயும் இனிக்கும்.
இது தான் கவிதையென்றில்லை எதுவும் கவிதையாகலாம் என்கிறேன்.
கவிதைக்கு நன்றி கவிஞனுக்கும் நன்றி கருப்பொருள் தந்ததற்கும் நன்றி கவி உயிர்கொடுத்த வாசகர்களுக்கே கோடி நன்றிகள்.
கருத்துகள்
கருத்துரையிடுக