என்னுள் நீ

உனக்கா என் வலிகள் இங்கு

உனக்கே உனக்கா என் விழிகள் இங்கு

உயிரே உன்னைக் கண்டேன் கண்டே என்னைக் கொன்றேன் எளிதில் எளிதாய் மரணம் வென்றேன் மார்பில் மலையை ஈன்றேன்

உயிரிலே உன்னை அணைக்கிறேன் உணர்விலே உன்னை அழைக்கிறேன் விடுதலை வேண்டி வணங்கிதான் விரல்களை தாண்டி விழுகிறேன் விழுந்துதான் விறகாய் எரிகிறேன்

என் அழுகை இங்கு அணையாத மின்விளக்கா இதுதான் என்தன் விதியின் விளையாட்டுக் கணக்கா விழித்துளி விழுந்த இடமெங்கும் படுகுழியாய் தெரிகிறதே குதித்திங்கு சாவதற்கிடையில் உடல் எங்கும் எரிகிறதே

என்னுள் நீ இருப்பதாய் என்னுயிர் உணர்கிறது உன்னுள்ளம் என்னை மறுப்பதால் உண்மை புரிகிறது

கவியிதழ் காதலன் ஐ.எம்.அஸ்கி

கருத்துகள்