எல்லாம் அவன் செயல்

அல்லாஹ்வை நினைவு கூறா உள்ளங்கள் அல்லாஹ்வை நினைவு கூறிய வண்ணம்.

குர்ஆனே ஓதாத நாவுகள் குர்ஆனை ஓதிய வண்ணம்.

இரக்கமே காட்டாத இதயங்கள் தேடித்தேடி இரக்கம் காட்டிய வண்ணம்.

உறவையே பேணாத உறவுகள் உறவாடிய வண்ணம்

பாவங்கள் செய்த மக்கள் பாவ மன்னிப்புக் கேட்ட வண்ணம்.

கல் நெஞ்சக்காரர்கள் எல்லாம் மென்நெஞ்சக்காரர்களாய் மாறிய வண்ணம்.

இம்மாற்றங்கள் எல்லாம் வேதனை தருகிற சோதனையாய் உயிரைக் கொள்ளும் கொள்ளை நோயாம் கொரோனாவை விட்டதன் மூலம்.

எல்லாம் நலவிற்கே... ஏந்துங்கள் கைகளை மனித மனம் அமைதியடைய... மாற்றங்கள் நிலை பெற... மகா கருணையாளனாம் நம்மை படைத்த ரஹ்மானிடம்.

மாறிய அனைத்தும் மாறிய படியே மானிட சமூகத்தில் மலருகிற நேரம் மனிதாபிமானம் நிறைந்த மனித குலத்தால் பூத்துக் குலுங்கும் இ்ப் பூவுலகம்.

Shara Bilaal

கருத்துகள்