காதல் வேண்டாமடி

பள்ளி செல்லும் பிள்ளை உனக்கு பார்த்தவுடன் காதல் கூடாது வேண்டாம் அந்த வழி கண்ணே..! வேண்டாம் அந்த வலி

நம்பி விட்ட பெற்றோர் உன் தூணாய் வீட்டிலிருக்க வீதியில் ஆடவரோடு வீண் பேச்சு வேண்டாமடி உனக்கு

ஓர் வார்த்தையில் வளைத்திடுவார் ஓர் பார்வையில் மயக்கிடுவார் ஓர் செயலில் இதயத்தின் உச்சியிலே இடம் பிடித்திடுவார்... கவனமாய் செல்..

காண்போர் எல்லாம் நல்லவரில்லை நீ கண்டெடுத்தது எல்லாம் வைரமுமில்லை வாலிப உணர்வுகளுக்கு வசப்பட்டு வாழ்க்கையை இழக்கும் வழி செல்லாதே

மூழ்கிப் போனால் போதை விலகிப் போனால் உயிர் கொல்லும் அணுவாயுதம், விஷ போசனம் தள்ளி நின்று இறை வழியில் இதயத்தால் ஓர் பயணம் எடு....

ஏரூர் நிலாத் தோழி

கருத்துகள்