காலம் எத்தனை கொடியது!! சில பொழுதுகளில் மனம் மாறா உனையும் முழுதாய் மாற்றி விடுகிறது! பல பொழுதுகளில் பணம் வேண்டும் உனையும் ஏமாற்றியும் விடுகிறது!
மனம் மாறுபவனை வாழ்த்துகிறது! குணம் குறைபவனை தூற்றுகிறது! மௌனத்திற்கும் பொறுமைக்கும் காலம் அழகாய் பதில் பதிவிடுகிறது காலம் தகுதியையும் பதவியையும் அவசியம் பெற்றுத் தருகிறது ! காலம் தகுதிக் கேற்ப பதவியை அழகாய் நிர்ணயிக்கிறது!
சதிகளையும் விதிகளையும் அறிவாய் காலம் முறியடிக்கிறது! காலம் மெழுகாய் கரைந்து செல்கிறது! மனதை இனிமையாக்கிச் செல்கிறது! காலம் பனியாய் மெழுகாய் கரைகிறது!
பயன் உள்ளவன் பயன் படுத்துவான் புத்தியுள்ளவன் பட்டை தீட்டிட காலம் வைரமாய் ஜொலிக்கிறது சில வேளை காலம் பொறுமையோடு சேர்ந்திட மரகதமாய் மின்னச் செய்கிறது!! காலத்தின் கால்களுக்கு கால் சங்கிலிகள் இடாமல் கால் கொலுசுகள் இட்டு வாருங்கள்...... காலத்தினை நாமும் அழகு பார்ப்போம்!!
எஸ்.ஏ.இஸ்மத் பாத்திமா பஸ்யால
கருத்துகள்
கருத்துரையிடுக