[products]
"இவள் ஒருத்தி" கவலையோடு கிடந்த வாஹிதாவின் வதனம் அவ் அழைப்பைக் கண்டு மீள் சினத்தால் சிவக்க, அழைப்புக்கு பதில் கொடுத்தாள்.
"என்னடி இப்ப உனக்கு நிம்மதியா?" தன்னவனுக்கு அழைப்பு செய்தால் யாரோ கடுமையாக கத்த, அது தன் அத்தை என்பதை உடனடியாக ஊகித்துக் கொண்டாள்.
"ஆன்ட்டீ... ஆன்ட்டீ, அதீக்... அதீக் எங்க ஆன்ட்டீ?"
"ஓஹ்! நடக்குறது, சொல்லுறது எல்லாம் உன் புருஷன் காதுல ஊதிடுவாய், இப்போ அவன் உசுறுக்கு போராடிட்டு இருக்கான். உனக்கு இப்போ நிம்மதியா?"
"நீங்க என்ன சொல்லுறீங்க ஆன்ட்டீ? எனக்கு எதுவுமே புரியல்ல.."
"நான் உன்கூட பேசினது எல்லாம் உன் புருஷன்கிட்ட சொல்லிட்டியே? அது எதயும் ஜீரணிக்க உறுதியில்லாதவன் கத்தியால குத்திட்டு சாவப் போனான்."
"ஆன்ட்டீ... நோ.. நோ.. அப்புடி இருக்காது. என் அதீக் அப்படி செஞ்சிக்க மாட்டாரு..."
"என்னடீ நான் பொய் ஆஹ் சொல்றன், பக்கத்துல இருக்குற ஆஸ்பத்திரி வந்து பாரு.." சொல்லிவிட்டு மொபைலைத் துண்டித்த வாஹிதாவின் இதயம் வேகமாகத் துடித்தது. "எல்லாம் இவளால தான்" மனதால் சர்மியைத் திட்டித் தொலைத்தாள்.
"உம்மா என் அதீக்... என் அதீக் எனக்கு வேணும் மா" நெஞ்சில் கையடித்துக் கொண்டு அழுத மகளைக் கண்டு பதறிப் போன ராபியா,
"என்ன புள்ள, என்ன நடந்த?"
"என்கிட்ட எதுவும் கேக்காதிங்கம்மா, கிளம்புங்க, என் புருஷன பார்க்கப் போவனும், கிளம்புங்கம்மா" எதுவும் அறியாத ராபியா, ஏதோ விபரீதம் நடந்து போயுள்ளதை மாத்திரம் ஊகித்துக் கொள்ள, மகளை ஆயத்தப்படுத்தி, ஆட்டோ ஒன்றுக்கு வரச் சொல்லி கிளம்பினாள்.
"புள்ள எங்க போவனும்னு சரி சொல்லும்மா" தாயின் தோலில் சாய்ந்தவளாய், தேம்பித் தேம்பி அழுதுக் கொண்டிருந்த சர்மி, "பக்கத்துல இருக்குற ஆஸ்பத்திரிக்கு போக சொல்லுங்கம்மா" கஷ்டப்பட்டு வார்த்தைகளை வெளியிட்டவளின் உள்ளம் பதறியது.
"யா அல்லாஹ்! என் புருஷனுக்கு மட்டும் ஏதும் நடந்துடக் கூடாது" அவள் உள்ளம் இறைவனை இறைஞ்ச, அதீகுடனான தன் வாழ்வில் தான் கண்ட சந்தோஷங்கள் ஒவ்வொன்றையும் நினைத்து கண்ணீர் விட்டாள்.
"என்ன விட்டுட்டு போகனும்னு உனக்கு எப்புடிடா மனசு வந்துச்சு?" ஆத்திரத்தின் உச்சத்தில் வாயால் முனங்கிக் கொண்டே தாயுடன் வைத்தியசாலையை அடைந்தாள்.
அங்கு ஆதில் தலையில் கைவைத்தவனாய் முன்னால் அமர்ந்திருக்க, கொஞ்ச தூரத்தில் அத்தையும் அமர்ந்திருந்தாள். இதன் பிறகும் அத்தை சொன்னது பொய்யல்ல என்பதனை ஊகித்துக் கொண்ட சர்மி, "அதீக்..." நாற்திக்கும் கேட்க கத்திக் கதறினாள். ராபியாவால் அவளை சமாதானப் படுத்த முடியவில்லை. கீழே விழுந்துக் கொண்டு, நிலத்துக்கு அடித்தடித்து அழுதாள்.
"பொல்லாத வேஷக்காரி" சர்மியின் கோலத்தைக் கண்டு , தனக்குத் தானே சொல்லிக் கொண்ட வாஹிதா, அவளை ஏறெடுத்தும் பார்க்காது கல்லாக அமர்ந்திருந்தாள்.
"பேர்ஷன் கு ரொம்ப நெருக்கமான யாராவது ஒருத்தர் உள்ள வரலாம்" ஒரு தாதி வந்து சொல்ல, சர்மியும், வாஹிதாவும் ஒரேயடியாக எழுந்து நின்றனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக