"சர்மிம்மா" மெதுவாக மனைவியை நெருங்கி வந்தான் அதீக்.
"என்ன ஹபி?"
இன்னக்கி போல எப்பவும் என்ன பயம் காட்டாத சரியா? அந்த கொஞ்ச நேரத்துல என் உசுரே போயிடும் போல இருந்திச்சு. இந்த தேவதைய ஒரு நிமிஷமும் என்னால இழக்க ஏலாது. அப்புடி ஒரு நிலம வந்தா கடவுள் முதல்ல என்னத் தான் அவன் பக்கம் எடுத்துக்கனும்"
"ஆஹ் போதும் இனி, வேற என்ன சரி பேசுவோமா?"
"உன்கிட்ட இப்புடி நெருக்கமா இருந்துட்டு என்ன பேச கண்ணு? சொல்லு... உன்ன அப்புடியே..."
"ஷ் சத்தம் போட வேணாம், வயித்துல இருந்துட்டு புள்ள எல்லாம் கேட்டுக்க போகுது..."
"எனக்கு அதப்பத்தி கவல இல்ல, இப்போ நான் ஹெபியா இருக்கனும். என்ன டென்ஷன் பண்ணினியே? அதுக்கு மாற்றீடு என்னடா?"
"ஒன்னும் இல்ல"
கணவனின் நெஞ்சைப் பிடித்து பின்னால் தள்ளி விட்டவள் எழுந்து நிற்க முயற்சிக்கையில், மனைவியின் மார்பில் கைவைத்து அப்படியே கட்டிலில் சாய்த்தான்.
"ஹபி...."
அவனின் முகம் மோகத்தால் மாறியிருக்க, அடுத்த கணமே அவளும் தன்னிலை மறந்து போனாள். மனைவியின் மேற்புறமாக நெழிந்தவன் அவளின் அழகு கன்னத்தை முத்தங்களால் நிறைத்து ஒவ்வொன்றாகவென முழு உடலையும் சுவைக்க, தன் கணவனுக்கு இலகுவாய் வளைந்து கொடுத்தாள் சர்மி. இருவரும் ஒருவருக்குள் ஒருவராய் இன்னும் ஒட்டிக் கொள்ள, மனைவியின் மனநிலையை சரிப்படுத்தும் முயற்சியில் அவளின் காதல் நிறைந்த காமத்துக்காக, என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையையும் அரங்கேற்றினான்.
"அபி, உம்மி கதவ திறவுங்க. அபி... அபி"
"மகன் இங்காள வாங்க, அபி வந்துடுவாரு..." விடயம் அறிந்த ராபியா சின்னவனை அழைக்க,
"அபி... கதவ திறவுங்களே!" அவனும் கேட்ட பாடில்லை.
வெளியே மகனின் கூப்பாடு காதல் உலகத்தில் மெய்மறந்து போயிருந்த கணவன் மனைவி இருவரையும் சுயநினைவுக்கு கொண்டுவர, அவசர அவசரமாய் தங்களை சரிப்படுத்திக் கொண்டனர். அதற்குள் மீண்டும் "அபீ" என்று சின்னவன் அலற, "வந்துட்டன் செல்லம்" ஓடிவந்து கதவைத் திறந்தான் அதீக்.
"என்னடா?"
"தூக்குங்க..."
"ஹ்ம்ம்" மகனை தூக்கி முத்தம் கொடுத்தான் அதீக்.
"ஏன்ட தங்கத்துக்கு ஒரு விஷயம் சொல்லவா?
"என்ன அபி?"
"இப்புடி வாங்க" சர்மியின் பக்கத்தே இருப்பாட்டினான்.
"உம்மீட ஸ்டொமெக் ல ஒரு குட்டி பேபி இருக்கு. டச் பண்ணி பாருங்க.." தந்தை அப்படிச் சொன்னதும் சின்னவன் முகம் சந்தோஷத்தில் ஜொலித்தது.
"ஹே ஜாலி, யே உம்மி என் கூட விளையாட குட்டி பேபி கொண்டு வரப் போறீங்களா?"
"ஓம் தங்கம். ஏன்ட புள்ளக்கி நல்லமே!"
"உம்மீ தம்பியா, தங்கச்சியா கொண்டுவரப் போறீங்க?"
"என்ன நல்லம் ஏன்ட மகனுக்கு..."
"ஹ்ம்ம்" கொஞ்ச நேரம் யோசித்தவன் "தங்கச்சி" என்றான் சிரித்துக் கொண்டே,
"ஓகே அல்லாஹ் கிட்ட துஆ செய்வோம் இன்ஷா அல்லாஹ்." மகனை வருடியவளாய் சர்மி சொல்ல, சின்னவனும் தலையாட்டினான்.
பதிலுக்கு அதீகும் சேர்ந்து கொள்ள, அக் குட்டிக் குடும்பம் இன்னொரு புது உறவுக்காக ஆவலுடன் காத்திருந்தது.
கதை தொடரும்… Aathifa Ashraf
[products]
கருத்துகள்
கருத்துரையிடுக