கொரோனாவிருந்து பாதுகாப்புப்பெற சுய தனிமைப்படல்

கொரோனா தொற்றுநோயிலிருந்து பாதுகாப்புப்பெற சுய தனிமைப்படல்( Self isolation/ quarantine) அல்லது சமூகத்திலிருந்து ஒதுங்கி இருத்தல்( social distancing/ physical distancing) பற்றி தற்காலத்தில் அதிகம் பேசப்படுகிறது. அதன் போது கடைப்பிடிக்க வேண்டிய சில விடயங்களை சுருக்கமாக நோக்கலாம்.

1) இந்த காலப்பகுதியில் வெளியில் செல்வதை குறைத்தல்/ வெளியிலிருந்து தம்மை தரிசிக்க வருபவர்களையும் கட்டுப்படுத்தல்.

2) மக்கள் ஒன்று கூடும் இடங்களுக்கு செல்வதை தவிர்த்தல். எல்லா விதமான ஒன்று கூடலையும் தவிர்த்தல்.

3) ஒரு நாளைக்கு குறைந்தது நான்கு தடவை சவர்க்காரம் போட்டு நன்றாக கைகளை கழுவுதல்/ இதற்காக செனிடைசர்களையும் பாவிக்க முடியும்.

4) ஒருவரை சந்திக்கும்போது குறைந்து 1 மீட்டர் இடைவெளியை பேணல்.

5) இருமல், தடிமல், காய்ச்சல் போன்றன நீடித்தால் உடனடியாக வைத்தியசாலையை நாடி பரீட்சித்தல்( testing).

6) காற்றோட்டமுள்ள அறைகளில் வசிப்பதோடு, வீடுகளிலுள்ள பொதுவான கழிவறைகளை( Shared bathroom) பாவிக்கும்போது சுத்தம் சுகாதார விடயத்தில் அதிக கவனம் செலுத்துதல்.

7) திண்மக்கழிவுகளை அதன் தன்மைக்கேற்ப வெவ்வேறான பைகளில் போட்டு அகற்றுதல்.

8)பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டிய தேவை ஏற்படும்போது நேரடியாக கடைகளுக்கு செல்லாமல் ஒன்லைன் மூலமாக பொருட்களை கொள்வனவு செய்வது சிறந்தது.

(மூலம்: பலதையும் வாசித்தவற்றிலிருந்து)

கலாநிதி றமீஸ் அபூபக்கர் சமூகவியல் சிரேஸ்ட விரிவுரையாளர் தென் கிழக்கு பல்கலைக்கழகம்.

கருத்துகள்