கொரோனாவே கொல்லாதே

கண்காணாக் தேசத்தில் உதித்த அரக்கனே... கண்ணீர்த்துளிகளை இரக்கமின்றி நொடிக்குக் நொடி குடிப்பவனே..

எதற்காக எம்மத்தியில் நுழைந்தீரோ எதை அடைவதற்கு நீ உருப்பெற்றாயோ விடையறியா எங்கள் வாழ்வில் வழியனுப்ப வந்தவன் நீதானா

தூங்காமலே அழுகிறது உலகம் துயரிலே மூழ்கிக்கிடக்கிறது மானிட தேசம் தூய்மை பேண மறந்த நவீன தேசத்தை தூசி தட்டி நினைவு படுத்த வந்தாயா உறவுகளின் மகிமையை உணர்த்த வந்தாயா பழமை வாழ்வை மீட்டல் செய்ய வந்தாயா இயந்திர உலகின் தலைக்கனத்தில் மிதந்த எங்களுக்கு ஓய்வு கொடுக்க வந்தாயா

உன் பெயர் கேட்டாலே நெஞ்செல்லாம் பதறிப்போகுதே மிச்ச அரை உயிரும் வெந்து போகுதே கொலைகார கொரோனாவே கொன்று குவிக்காதே எம்மக்களை

பீதிலே பிழைப்பு நடத்திய கூட்டம் என்று எங்கள் வரலாற்றை எழுத நினைக்காதே அறியாமையை உணர்ந்திட்டோம் அகன்று விடு கொரோனாவே அகன்று விடு

எங்கள் அழுகுரலை ருசி பார்த்தது போதும் வீட்டிலே முடக்கி அழகு பார்த்தது போதும் உறவுகளை இழப்பை பார்த்தது போதும் கோடிகள் புரளும் உலகத்தில் உனக்கெதிரான மருந்தை கண்டு பிடிக்க முடியலயே கொரோனாவே கொல்லாதே கொரோனாவால் கொல்லாதே அழுது வடிக்கிறோம் படைத்தவனே பாதுகாத்து விடு

அனுகவி றிப்கான், அட்டாளைச்சேனை-06.

கருத்துகள்