கொரோனா விடுமுறையில்...

கொரோனாவின் விடுமுறையில் குதூகலிக்கும் குழந்தைகளே! சற்றிங்கு வாருங்கள் சளைக்காமல் பேசிடவே!

ஆரோக்கியமும் ஓய்வுமது இறையோனின் அருட்கொடையாம் எனும் இறைதூதர் வாக்கதனை உணர்ந்திட்டு நீ-இங்கு வகுத்திடு உன் நேரமதை!

நாள் முழுதும் உறங்காமல் நாளை நீ கழிக்காமல் நாளைய உன் வெற்றிக்காய் நாட்டிடு உன் பயிர்களதை!

வாசிப்பெனும் காற்றை-நீ சுவாசி உன் வாழ்வதனில் உற்றார் நலனதிலும் உதவி பல நல்கிடுவீர்!

ஆற்றல் பல வளர்த்திடும் அருமையான பொழுதினிலே! அளந்திடு உன் இலக்குதனை-அதை அடைந்திடவே முயன்றிடு-நீ

மொழிவளமும் நீ வளர்க்க முறையான தருணமிது! முஹாஸபா செய்திடவும் முத்தான தருணமிது!

இனிய இவ்வேளையிலே இபாதத்தும் பல செய்து இறையோனை நெருங்கிடவே இழப்பின்றி இணைந்திடு-நீ

சமூகத்தின் எழுச்சிக்காய் சரித்திர வரலாற்றை சாதிக்க நீ-இன்று வரைந்திடு உன் திட்டமதை வல்லோனின் உதவியுடன்!

J.Noorul Shifa SEUSL

கருத்துகள்