கொரோனா

"கொரோனா" கோரப்பிடியில் சிக்கித்தவிக்குது வையகம் கொடுமை கொடுமை! மரணபயம் மானிடரை கொல்லாமல் கொல்கின்றது.

உலகமயமாக்கல் சுக்குநூறாகி தனிமைப்படுத்தல் தாண்டவமாடுகின்றது.

விந்தைகள் புரிந்து வியக்க வைக்கும் விஞ்ஞானமும் வைத்தியமும் வியந்து பார்க்கும்.

ஆட்கொல்லி நோயாமே, காத்துல பரவுதாமே, பாம்புக்கறி செஞ்ச வேலயாமே, அமெரிக்கா காரன்தான் பரப்புறானாம்.

அப்பாவி மக்களது அங்கலாய்ப்பு.. அதுக்குள்ள அரசியல் வேற.

"கெம்பஸ்" ஆக்கிரமிப்பு. இவற்றின் நடுவே வழமைபோல பேஸ்புக்கும் வாட்சப்பும் துஆக்களாலும் வதந்திகளாலும் நிரம்பி வழிகின்றது.

பிரார்த்திப்போம் தொழுது அழுது பிரார்த்தனைகள் மாமருந்து.. இறைவா, பிழைபொறுப்பாயாக!

நாச்சியாதீவு எம். சஹ்ரின் அஹமட்

கருத்துகள்