கொரோனா

கொரோனாவின் பீதியிலே குறைகள் பல கூறிட்டும் குற்றம் பல நாமிழைத்தும் குமுறிக் கொண்டிருக்கும் தருணமதில்சற்றே நாம் மீட்டிடுவோம்

சங்கையாளன் தொடர்புதனை! சோதனைகள் பல வந்திடினும் சோர்விழக்கான் முஃமின்-அவன் சாதனைகள் பல செய்து ஸஜ்தாவில் வீழ்ந்திடுவான் முஃமின்

தான் செய்த பாவமதை தனிமையிலே உணர்ந்தவன் தயாளனின் தர்பாரிலே ஏந்திடுவான் கரங்களதை!

கோடி கோடிச் சொத்திருந்தும் என்ன பயன்?- இங்கு அதை தேடித் தேடி கொடுப்பதிலே இன்பசுவை என்றும்!

அந்நியரின் சதிவலையில் அநியாயமாய் நாம் மாட்டி அல்லாஹ்வின் அருளதனை விட்டிங்கு செல்லாமல் அழைத்திடுவோம் இறையோனை அடைந்திடுவோம் அவன் பொருத்தமதை!

J.Noorul Shifa SEUSL

கருத்துகள்