நம் தினத்தில் நமக்காய் சாதிக்க நினைப்பவனுக்கு தடைகள் ஒரு சதி அல்ல..
கவி பாடும் கவிஞர்களுக்கு காவியால் கவி கொண்டு போற்றுகின்றேன் ஊட்டுகின்றேன் சுவை ஊட்டுகின்றேன் எழுத
சாதியால் செத்து மடிந்த கூட்டம் இன்று சாதி இன்றி நேயம் கொண்டு எழும் இந்த நாட்களில், கவிஞர் நமக்கு ஒரு தினமாம் கொண்டாட தடை இல்லை கோரோனாவும் தடை இல்லை எம் கவி மிளிர.
எழுதுங்கள் கோரோனாவுலக்கு, தன் உயிர் கொடுத்து உயிர் காக்க மருந்து தேடும் வைத்தியர்களை புகழ்ந்து கூறுங்கள் அவர்கள் வெற்றி தூரமில்லை.
எழுதுங்கள் ஊரடங்கு சட்டத்தில் அடை பட்ட பசி உணரும் உள்ளங்களுக்கு காத்திரிப்பில் கொஞ்சம் பொறுங்கள் என்று.
எழுத்துங்கள் வெளி நாட்டில் சிக்கி தவிக்கும் சொந்தங்களுக்கு உங்கள் உறவோடு சேரும் நாள் தூரமில்லை என்று.
எழுதுங்கள் நோயால் வாடி கிடக்கும் உயிர்களுக்கு மருந்து வெற்றியை ஈட்டும் என்று.
எழுதுங்கள் மடிந்து போன உயிர்களின் உறவுகளுக்கு கலங்காதீர் எல்லோரும் மடியத்தான் போகிறோம் என்று.
எழுதுங்கள் தும்மினால் பயப்படும் உறவுகளுக்கு கோரோனா இல்லை வெறும் தும்மல் தான் என்று.
எழுதுங்கள் ஆதரவாய் எழுதுங்கள், ஆதரவாய் எழுதுங்கள்.
நிந்தவூர் றிசாமா SEUSL
கருத்துகள்
கருத்துரையிடுக