ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் தொழுகையை இமாமத் செய்துகொண்டிருந்தபோது , சிறு குழந்தையாக இருந்த ஹஸன் (ரழி) அவர்கள் நபியவர்கள் ஸஜ்தா செய்யும்போது நபியவர்களின் முதுகின் மேல் அமர்ந்து கொள்ள , அவர் கீழிறங்கும் வரை நபியவர்களும் அவரைப் பின்பற்றித் தொழுத ஸஹாபாக்களும் ஸஜ்தாவிலேயே இருந்தார்கள். (நஸாயீ)
இந்த நபிமொழி நபிகளார் பிள்ளைகள் சுட்டித்தனமாக செயல்படுவதை அங்கீகரித்தமைக்கான அடையாளமாகும். பிள்ளைகள் துடித்தனத்தனமாக இருப்பது அவர்களது வயதின் இயல்பாகும். அதனை ஏற்பது அவசியம் என்பதை நபியவர்கள் தொழுகையிலேயே அவர்களது சேட்டைக்கு இடத்திலிருந்து புரிகின்றது.
ஆனாலும் அதிதுடினத்தன்மை (Hyperactive) என்பதை உளவியல் பிறழ் நடத்தையாகக் கருதி சிகிச்சை பெறுவது அவசியமாகும். அது தவிர்ந்து ஹஸன் (ரழி) யைப் போன்ற துடினச் செயல்பாடுகளில் (Active) ஈடுபடுவது பிள்ளைகளின் இயல்பு என்று புரிதலுடன் ஏற்பதும் அதற்கான சந்தர்ப்பங்களை வழங்குவதும் அவசியமாகும்.
கருத்துகள்
கருத்துரையிடுக