பாசாங்கு செய்யும் பாசக்காரா பறிக்கின்றாயே - என் உயிரை லேசா... உள் சென்று பார்த்தாயா? - என் உள்ளத்தில் இருப்பதை நீ அறிவாயா? உனக்காக உறங்காமல் காத்து கிடக்கிறனடா...
உயிரை உருக்கியவனே உன் உள் நோக்கம் தான் என்னவோ...
கன்னி மனதை கசக்கி பிளிகிறாயே - சொன்னால் தான் காதலா?...
உன் விரல் பிடித்து உறங்கிட ஆசையடா உன் தலை கோறி ஆறுதல் சொல்ல ஆசையடா... தனிமையில் - நீ தாங்கிக் கொள்ள உன் மார்பில் முகம் புதைத்திட ஆசையடா....
கன்னி என் கண்களை பார்த்து அறிந்து கொள்ள மாட்டாயோ... ஆசைகளை நிறைவேற்றிட மாட்டாயோ... சொன்னால் தான் காதலலோ...
கருத்துகள்
கருத்துரையிடுக