துணையுடன் துணை நிற்கும் பண்பாடு

நபி (ஸல்) அவர்கள் வீட்டில் என்ன செய்வார்களாக இருந்தார்கள் என்று ஆயிஷா நாயகியிடம் கேட்க , அதற்கு அவர்கள் : "அவர் தம் குடும்பத்தினருக்கு வீட்டு வேலைகளில் உதவி செய்வார்கள். தொழுகை நேரம் வந்ததும் தொழுகைக்காக வெளியே செல்வார்கள்" என கூறினார்கள். (புகாரி)

என்னவொரு அழகிய முன்மாதிரி. நபியவர்கள் சமூகத்தில் தலைவராக இருந்தாலும், வீட்டில் குடும்பத்தினருக்கு பணிவிடை செய்யும் வழக்கம் உடையவர்.

கோரி சேப்மேன் 'லவ் லங்வேஜ்' எனும் பிரபல்யமான தனது புத்தகத்தில் , குடும்ப வாழ்வில் சந்தோஷம் நிலைப்பதற்கு அவசியமான காரணிகளுள் ஒன்றாக குடும்பத்திற்கு பணிவிடை செய்வதனைக் குறிப்பிடுகிறார்.

அவர் கூறும் சில ஆலோசனைகள் :

  1. உங்கள் கணவனோ மனைவியோ , உங்களிடம் விடுத்த அனைத்து கோரிக்கைகளையும் பட்டியலிடுங்கள். ஒவ்வொரு வாரமும் அதில் ஒன்றை நிறைவேற்றி , உங்கள் துணையை மகிழ்வியுங்கள்.
  2. உங்கள் துணை வெளியூர் சென்றிருக்கும் போது, அவர் செய்து முடிக்க வேண்டிய அவரது வேலைகளை நீங்கள் செய்து வையுங்கள். அவர் வீட்டிற்கு திரும்பியதும் குழந்தைகளுடன் சேர்ந்து 'வீ லவ் யூ' என உற்சாகமாகக் கத்துங்கள்.
  3. உங்கள் துணை உங்களை தினமும் நச்சரிக்கும் ஒரு பணிவிடையை நீங்கள் செய்து முடித்தால், ஓராயிரம் ரோஜாக்களை விட மதிப்புவாய்ந்ததாக அது அமையும்.
  4. காரை கழுவுங்கள், ஒரு வேலை உணவைச் சமைத்து வையுங்கள், படுக்கையறையை அழங்கரியுங்கள், வீட்டைச் சுத்தம் செய்யுங்கள், மேசையைத் துடைத்து, அதில் "என் காதல் மனைவிக்கு / கணவனுக்கு" என எழுதி கையொப்பம் வையுங்கள்.
  5. நாளாந்த நடத்தைகளை பணிவிடையாகச் செயல்படுங்கள். (அழுக்குத் துணிகளை அதற்குறிய இடத்தில் வைத்தல், சாப்பிட்ட பாத்திரத்தை கழுவி வைத்தல், துணிகளை மடித்து வைத்தல், சீப்பில் இருந்து முடிகளை அகற்றுதல், இது போன்று......)
  6. உங்கள் துணையிடம் அவர்கள் எம்மிடமிருந்து எதிர்பார்க்கும் பணிகளை அடிக்கடி கேட்டறிந்து கொள்ளுங்கள்.

துணைக்கு பணிவிடை செய்வது ஒரு அழகிய இஸ்லாமிய பண்பாடு என்ற உணர்வுடன் துணையுடன் அனைத்திலும் துணை நிற்போம்.

நபி (ஸல்) அவர்கள் அன்னை ஸபிய்யா (ரழி) அவர்களை திருமணம் முடித்த போது ; "தனது முழங்காலை வைத்து , அதில் ஸபிய்யா (ரழி) அவர்கள் காலை வைத்து ஒட்டகத்தின் மீது ஏறுவதற்கு வழிவகை செய்தார்கள்." (புகாரி)

Fazlan A Cader

கருத்துகள்