நித்யா… அத்தியாயம் -32

பவித்ரா பரிதவித்துப் போனாள்.

''வய்? நீங்... நீயா...?''

அவள் வினோத்தை நோக்கி ஓடினாள். கணப் பொழுதில் நடந்தேறிய இந்த நிகழ்வால் கலக்கமடைந்திருந்த லட்சுமியும் திக்பிரமை பிடித்தவளானாள். பவித்ராவின் கண்களிலோ கனல் பறந்தது. அவனை நோக்கி கை ஓங்கியவளை ஒரு கை பலமாகத் தடுத்தது. லட்சுமி , அவளது கையைப் பிடித்திருந்தாள்.

''ஓஹ்.... நீங்கெல்லம் சேந்து நாடகமாடிருக்கீங்களா?''

''இங்க பாரு... பவி....'' லட்சுமியின் வார்த்தைக்கு இடையில்,

''பிளீஸ்..... ஒன்னும் சொல்லாதீங்க... எனக்கு தா தெரியாம போச்சு.... சீ....'' துப்பியவளின் கன்னத்தில் அறைந்தாள்.

''என்ன செய்ற நீ...? இவனா.... உங்கக்காவ.... இல்லடா.... அந்த டைம் சின்ன மிஸ்டேக் நடந்ததுடா... ''

அழ ஆரம்பித்தவளை ஆச்சரியமாகப் பார்த்தாள். மெல்ல அவளருகே வந்தவன்,

''பிளீஸ்... அழாத லக்ஷ்மி...''

''போடா.... அந்த சம்பவத்த இவகிட்ட சொல்ற காலம் வந்திட்டுதுடா... விடு...'' பெருமூச்சு விட்டாள் அவள். சிறிது நேரத்தில் கண்களைத் துடைத்துக் கொண்டவள்,

''பவி.... உனக்கான நேரம் வந்தாச்சி...'' அவளினருகே அமர்ந்தவள்,

''உங்கக்கா ரொம்ப நல்ல பெண்ணு.... அன்னிக்கி....''

அவளால் மேலே கூற முடியாது திமிறினாள். பவித்ரா அமைதியாக அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

''லஷ்மி... அத விடு பிளீஸ்...'' வினோத் கத்தினான்.

''முடியாதுடா... அவளும் புரிஞ்சிகிற நேரம் வந்தாச்சு....'' வினோத் அந்த இடத்தை விட்டு அகன்றான். கார் புறப்படும் சப்தம் அந்த வீட்டிலிருந்த இருவருக்கும் கேட்டது.

லட்சுமி பெருமூச்சுடன், ''அவன் போகட்டும் விடு...''

சிறிது நேரம் அங்கு பூரண நிசப்தம். மாலையில் வீடுநோக்கித் திரும்பும் பறவைகளின் ஒலி இனிமையாகக் கேட்டது. ஆனால், அவளால் அதை இரசிக்க முடியவில்லை. எங்கோ வெறித்துக் கொண்டிருந்தாள். மெல்ல அவளது தோளைத் தொட்டவள்,

''இங்க பாரு பவி...''

தொடரும்…. Rifdha Rifhan SEUSL

கருத்துகள்