நித்யா… அத்தியாயம் -34

விக்னேஷின் உள்ளம் ஏதோ புதுவிதத்தில் உஷ்ணமாவதை உணர்ந்தவன்,

''அண்ணா.... என்ன அவ்ளோ பேச்சு?'' வினோத்தின் முகத்தில் புன்னகை தாண்டவமாடியது.

''நம்ம அம்மாகு பொறகு நா பழகிய முதல் பொண்ணுடா அவ...''

''சரி... சரி... அண்ணா... இந்த புராஜக்ட் பத்தி...''

''ஓஹ்... வா... டிஸ்கஸ் பண்ணலாம்...'' இருவரும் இணைந்து சென்றனர்.

*********************

''ஹேய்.... பொஸ் என்ன சொன்னாரு தெரியுமா?'' ஏதோ எழுதிக் கொண்டிருந்த லட்சுமி கையை விரித்தாள்.

''போடி.. என்னய ஈவினிங் வெளியில கூட்டி போறதா சொன்னாருடி...''

''ஓஹ்.... நா நெனச்சன்டி... '' நகைத்தவளைப் பார்த்து ,

''போடி... பொறாம படாத...''

''ஹும்.... இப்ப நாங்க சொல்றதெல்லாம் இப்ப அப்டிதா இருக்கும்... இனி...''

பொய்க்கோபம் கொண்டு முகம் திருப்பியவளை கட்டிப்பிடித்துக் கொண்டாள். அவள் அவசர அவசரமாக தனது வேலைகளைச்செய்து கொண்டிருப்பதைப் பார்த்த லட்சுமி சிரித்தாள். கண்களால் அவளை முறைத்தவள் ,

''ஒனக்கும் இப்டியொருநாள் வரும்டி...''

''போடி.... போடி... நீ மாட்டிக்கிட்டது மாதி நான் மாட்டிக்கவே மாட்டேன்...''

மீண்டும் அவளை முறைத்தவளின் பார்வை பின்புறம் கேட்ட சப்பாத்துச் சத்தத்தை நோக்கி திரும்பியது. அங்கே, வினோத் முகத்தில் இருக்கத்துடன் அவசரமாக நடந்துகொண்டிருந்தான். அவளுக்குள் இருந்த மகிழ்ச்சி புஸ்வானம் போலானது. அவன் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தவளை கண்களில் கனிவுடன் நோக்கிய லட்சுமி,

''ஹேய்..... கவலப்படாத... வந்துடுவார்...'' அவளை கண்களில் கலக்கத்துடன் பார்த்தவள்,

''இல்லடி இவரு இப்டி அவசரமா எங்க போறாரு?'' யோசனையுடன் கூறியவளின் முதுகைத் தட்டியவள்,

''ஏதாச்சும் அவசரமாக இருக்கும்டி... நீ யோசிக்காத....''

''நித்யா அக்கா... ஒங்கள பொஸ் கூப்பிட்டாரு....'' அவளது முகம் மேலும் இருண்டது. லட்சுமியைப் பார்த்தாள்.

''அடி... போ....''

கைகளை அழுத்தி விட்டாள். நெஞ்சில் முள் குத்தும் வலியுடன் அவனது அறை நோக்கி நடந்தாள் .

தொடரும்…. Rifdha Rifhan SEUSL

கருத்துகள்