பிள்ளைகளை முத்தமிடுவோம்.

நபி (ஸல்) அவர்கள் தனது மகள் பாத்திமாவிடம் சென்று அவரது கையை முத்தமிட்டு வரவேற்பவராக இருந்தார் (அபூதாவூத்)

தந்தையாக செயல்படும் பலர் விடுகின்ற தவறு தனது உணர்வு சார்ந்த விடயங்களை பிள்ளைகளுடன் பகிராமையாகும். அன்பு, பாசம் போன்ற குணங்கள் தம்மிடம் இருக்கின்ற போதும் அவற்றைவெளிக்காட்ட தன் ஆணிய உணர்வினை தடையாக நினைக்கின்றனர்.

குறிப்பாக பெண் பிள்ளைகள் தன் தந்தையின் அரவணைப்பில் அதிகம் தேவையுடையவராக இருக்கின்றனர் என்பதனை உளவியல் ஆராய்ச்சிகள் பதிகிவிடுன்றன.

சில சமயங்களில் தந்தையிடம் இருந்து சென்றடையாத பூரண அன்பின் விளைவாக பெண் பிள்ளைகள் முறை தவறிய செயற்படுகளில் ஈடுபடவும் தமது இல்லர வாழ்வில் தோழ்வியடையவும் செய்கின்றமையினை அவதானிக்க முடிகின்றது.

நம் அழகிய உணர்வுகளை வெளிப்படுத்துவோம்

Fazlan a cader

கருத்துகள்