சீதனமும் வேண்டாம் சிறுமைளும் வேண்டாம் மஹர் கொடுத்தொருத்தி என் மனையாளாய் வேண்டும்
பணமும் வேண்டாம் வீடு வாசலும் வேண்டாம் அவள் பண்பாடு போதுமெனக்கு அவள் பதி விரதம் போதுமெனக்கு
நகைகளும் வேண்டாம் வாகனங்களும் வேண்டாம் அவள் நடத்தை போற்றும் நம்பிக்கை போதுமெனக்கு
இல்லறம் சிறக்க........
மார்க்கம் மறந்து பெண்ணெடுத்து பொருள் கேக்கும் பொல்லா குணம் நபி வழி சொல்லாதது மறந்து நான் போகும் வழி பாவத்தில் நுழைவதுவோ...?
முதிர் கன்னிகள் பலரும் மூலைக்குள் முடங்கி அழும் நிலை பெருக்குவதோ ஆணினத்தின் அழகு......
அவள் முகத்தில் அழகு தேடி வெள்ளைத் தோல் கேட்டு வெருண்டு போதுவோ ஆண்மையின் பொருள்....
கறுப்புத் தோலோடே கண்ணான ஒருத்தி கடமைகள் தவறாத ஒருத்தி என் உடைமையாவாள்...
மஹர் கொடுத்தொருத்தி என் மனையாளாய் மார்க்கம் கொண்டு வருவாள் சுவனம் அழைத்துச் செல்லும் துணையாவாள் அவள் எனக்கு......
கருத்துகள்
கருத்துரையிடுக