மார்க்கம்

 قال العلامة الألباني -رحمه الله-:

الدين ليس بالعقل والعاطفة إنما باتباع أحكام الله في كتابه وأحكام رسوله في سنته وفي حديثه.

அறிஞர் அல்பானீ (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: மார்க்கம் என்பது பகுத்தறிவுவையும் உணர்வையும் கொண்டு (உண்டானது) அல்ல, (மாறாக) அல்லாஹ்வின் சட்டங்களை அவனுடைய வேதத்தில் (குர்ஆனில்) பின்பற்றுவதன் மூலமும், அவனுடைய தூதரின் சட்டங்களை வழிமுறையிலும் ஹதீஸிலும் பின்பற்றுவதன் மூலமும் தான் (உண்டானது). (நூல்: அல் ஹுதா வந்நூர், பக்கம்: 530)

كل طريق لم يصحبها دليل القرآن والسنة فهي من طرق الجحيم والشيطان الرجيم.

(مدارج السالكين ٤٣٩/٢)

இமாம் இப்னுல் கய்யிம் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: குர்ஆன் மற்றும் (நபியின்) வழிமுறையின் ஆதாரம் ஒன்றிணையாத அனைத்து வழிகளும் நரக நெருப்பு மற்றும் எறியப்பட ஷைதானின் வழிகளில் உள்ளவையாகும்.(நூல்: மதாரிஜுஸ் ஸாலிகீன், பாகம்: 02, பக்கம்: 439)

قال الإمام سفيان الثوري -رحمه الله-:

وإياك وأهل الدنيا الذين يخوضون حديث الدنيا فإنهم يفسدون عليك دينك وقلبك.

( حلية الأولياء ٨٢/٧)

இமாம் ஸுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: உலக பேச்சில் மூழ்கிக் கிடக்கும் உலக (ஆசை) உடையவர்களை உனக்கு எச்சரிக்கின்றேன், ஏனென்றால் அவர்கள் உன்னுடைய மார்க்கத்தையும் உன்னுடைய உள்ளத்தையும் உனக்கு குழப்பி விடுவார்கள். (நூல்: ஹில்யதுல் அவ்லியா, பாகம்: 07, பக்கம்: 82)

ஹஸ்னி தாவூத் (அப்பாஸி) (BA.Hons)

கருத்துகள்