விடை தேடும் வினாக்கள்

எனக்குள் ஓர் அச்சம் இனி ஏதுமில்லை மிச்சம்!! யார் யாரிடம் எதைக் கேட்பது என்றென்னி

எம் உயிர் பூத்த உடலை எம் மலர் போன்ற உள்ளத்தை கொன்று விடுவாரோ என்றே அன்றாடம் அச்சம் எனக்குள்!

கேள்விகள் கேளுங்கள் விடை சொல்லலாம்! கேட்கும் கேள்விகள் வானுள்ள வரை வாழட்டும் வாயுள்ளவரை வாழ்த்தட்டும் வயதுள்ளவரை வருத்தாதிருக்கட்டும்

நீங்கள் கேட்கும் கேள்விகள் நாகரீகமாக இருக்கட்டும்! உங்கள் கேள்விகள் நட்புக்கு விடை கொடுக்காதிருக்கட்டும்! நட்புத் தொடர விடை காணும் கேள்விகளாய்க் கேளுங்கள்!

எஸ்.ஏ.இஸ்மத் பாத்திமா பஸ்யால

கருத்துகள்