விண்மீன்களின் தேசத்தில்

தாய் வீடு தாண்டும் பெண்ணுக்கு தாங்கிட தாய் போல வேண்டும் மாமியார்.

தடுக்கி விழுந்திட விடாமல் தன் பிள்ளை போல எண்ணிடும் மாமனார் வேண்டும்.

சண்டை போட்டி என்றாலும் விட்டுக் கொடுக்கா நாத்தனார் வேண்டும்.

நண்பனாய் தாங்கிடும் துணைவனாய் நிழல் போல கூடவே நினைக்காத அன்பில் என்னை அழ்த்தும் வாசகனாய் .

கவிஞன் போல கணவன் வேண்டும்.

வீட்டின் விண்மீனாய் சொலித்திடும் மூத்த மருமகளாய்.

ஆரை போல அன்பைக் கொட்டும் கூட்டுக் குடும்பம் ஒன்றோடு கூடி வாழனும் காகம் போல.

அக்கம் பக்கம் பார்க்கும் திசையெல்லாம் நாத்தனார் வீடே நிறைந்திருக்க வேண்டும்.

வீட்டோரமா அந்தி சாயும் வேளை பாயிட்டு பந்தி வைத்து.

வானம்பாடி போல சப்தமிட்டு சுற்றி வரும் சொந்தமொன்றின் அன்பில் அதிசயித்திடனும்.

வெள்ளி ஓர் விடுமுறை வேண்டும்.

சொந்த பந்தம் எல்லாம் ஒன்றாய் கூடிட வேண்டும்.

ஏரூர் நிலாத்தோழி

கருத்துகள்