அருளான அல்குர்ஆன்!

மலக்குகள் பலர் சூழ மனஅமைதி எமக்கிறங்க மறையோன் அளித்திட்ட மதுரமான வேதமதே மகிமைமிகு திருக்குர்ஆன்!

ஒன்றுக்குப் பத்தாய் பல்லாயிரம் நன்மைகளை அடியார்கள் நாம் பெறவே படைப்பாளன் அருளிட்டான் பண்பான பனுவலதை!

உள்ளத்தின் ஒளியாய் உண்மையின் உறைவிடமாய் உலகத்தார்க்கு வந்ததுவே உலகமறை வேதம்!

சத்திய-அசத்தியத்தை சரியாய் நாம்-புரிந்திடவே அருளாளன் இறக்கிட்டான் சங்கையான இரவினிலே!

தஜ்வீத் முறையுடனே தயாளனின் அருள் வேண்டி தெவிட்டல் ஏதுமின்றி ஓதிடும் மறையதுவே தித்திக்கும் திருக்குர்ஆன்!

வரவிருக்கும் ரமழானை தவற நாமும் விட்டிடாமல் திருமறையை ஓதியே-நாம் திரட்டிடுவோம் நன்மை பல (இன்ஷா அல்லாஹ்)

J.Noorul Shifa Jaffna SEUSL

கருத்துகள்