அலட்சியப் பெண்ணாய் நான்

தெளிவில்லாத இலக்கில் தேர் ஓடிப்பார்ப்பதாய் தெளிவாய் பலர் சொல்லிவிட்டனர்.

தேர்ந்தெடுக்கையில் தவரென்று தெரிந்தவர்கள் சொல்லி இருந்தால் தேவையில்லாத புலம்பல்கள் ஏன்.

பெண் பெண்ணாய்தான் இருக்கவேண்டும் விண்ணிற்குச்செல்ல நினைத்தால் மண்ணாய் நினைத்து மிதுத்திடுவார்களாம்.

படித்தோமா முடித்தோம் பார்த்தவனை கரம் பிடித்தோமா- என பாசங்கு வாழ்க்கைக்கு பழகிடவேண்டுமாம்.

அவள் சாதித்தாள் இவள் சரித்திரம் படைத்தாள் - என வசனம் பேசினாள் வாயாடியாம்.

சாதிக்க நினைக்கிறேன் சவால்களை முறியடிப்பேன் - என்றால் வளர்ப்பு சரியில்லையாம்.

மேடையில் பேச ஆசைப்பட்டேன் முன்னே - ஊர் பேசி முடித்தது ஒழுக்கம் கெட்டவளாம்.

முக்காடனிந்து மூலைக்குள் ஒடுங்கியிருத்தலா முறையான வளர்பென்கிரீர்.

எப்பக்கமும் எதிர்ப்பா - இல்லை எதிர்பார்ப்பே தப்பா எனக்குள்ளே புதைத்துக்கொள்கிறேன் என்னை நானே அழித்துக்கொள்கிறேன்.

Asana Akbar Anuradhapura SEU Of Srilanka

கருத்துகள்