ஆட்கொண்ட விரக்தி

வேண்டாம் என்கிறேன் வெறுப்பினால் அல்ல

விட்டுவிடு என்கிறேன் விரக்தியாலும் இல்லை

தேடாதே என்கிறேன் தொலைதூரம் தொலைந்துவிடலாமென்பதாலே

போதும் என்கிறேன் பூரணமானதால் அல்ல

கெஞ்சலாய் நிற்கிறேன் காரணம் சொல்ல முடியுதில்லை

புரிந்துகொள் என்கிறேன் புலம்பாமல் முடியுதில்லை

மறந்திடு என்கிறேன் - பிரிதை நினைத்ததால் அல்ல

பரிவு காட்டென்கிறேன் பழகிப்பிரிய சக்தியில்லை என்பதால்

நிராசை கொள் என்கிறேன் நிழலாய் நான் தனிமைபடுத்திடுவேனேன்பதால்

தீர நம்பாதே என்கிறேன் தீர்கம் என்னிடம் இல்லையென்பதால்

வாக்குறுதி கேட்காதேன்கிறேன் வைத்துக்காப்பாற்ற சக்தியில்லை

அரவணைக்காதே என்கிறேன் அரவமாய் மாறி தீண்டிடலாம் என்பதால்

தள்ளியே இரு என்கீறேன் தீராத அன்பின் காரணமாகத்தான்

வரம் கேட்கிறேன் வழிவிட்டு தா என்றுதான்

குறையென்ன என்கிறாய்- அதற்கான நிறை என்னிடம் இல்லை என்பதால்

அவகாசம் கேட்கிறாய் அனாவசியம்; தருவதென்கிறேன்

ஆபாயம் என்கிறேன் அந்தத்தை பற்றி நினைத்ததனாலே

ஆங்ரோஷமாய் கத்துகிறேன் அன்பை அள்ளிப்பருகிட முடியாததாலே

இத்தனையும் சொல்லிவிட்டேன் இனி என்னில் நீங்கிடுவாய்

அத்தனைக்குப் பிடிக்கிறது ஆனால் அபாயமனி எங்கோ ஒலிக்கிறது

தயவு காட்டிவிடு தயவாய் கேட்கிறேன்

சேரா வரம் போதும் - பிரிந்து சோர்ந்து

Asana Akbar Anuradhapura SEU Of Srilanka
Advertising that works - yX Media Monetize your website traffic with yX Media

கருத்துகள்