இப்படித்தான்

மனிதனே உலக வழமை இப்படித்தான்! இப்பொழுதாவது புரிகிறதா உனக்கு

உண்மை உரைப்போருக்கு இன்று உலக வாழ்வில் இடமில்லை!

நீ பொய்யனாக இருந்து பார் தூற்றுகின்ற உலகம் உன்னைப் போற்றும்!

உன் கண்முன்னே குறை கூறிய ஒரு முகத்திற்கு உன் காதுகேட்க புகழ்பாடுவர் நீ கேட்கவே!

நீதியாக எப்பொழுதும் தீர்வு கிடைக்கும் அல்லது கொடுப்போம் என எண்ணிவிடாதே!

அநீதம் ஒன்று இருப்பதனால் தான் இன்று உலகமே அசைகிறது!

இறைவனுக்கும் கண்கள் இல்லையா?? என நீ கேட்பது நியாயம் தான்.

ஆனால் இப்பொழுதெல்லாம் இறைவன் அநீதம் செய்யும் அநியாயக் காரர்களின் பக்கமே நிற்கின்றான்!

அவர்கள் இறைவனையும் அவர்களுக்கு விலைக்கு வாங்கி விட்டனர்!

மனிதனே! இதனை நன்கு கேள் உலக வழமை இப்படித்தான்!

H.F.Badhusha Faculty of Islamic Studies South Eastern University Of Srilanka
Advertising that works - yX Media Monetize your website traffic with yX Media

கருத்துகள்