ஏமாற்றங்கள் வலிக்க வில்லை இழப்புக்கள் பழகிப்போனதால்
பிரிவுகள் வலிக்க வில்லை தனிமைகள் துணை இருப்பதால்
கண்ணீர் கடல் வற்றவில்லை சோதனைகள் ஊற்றெடுப்பதால்
நிஜங்கள் வலிக்க வில்லை கற்பனைகள் வேரூன்றியதால்
சாகசங்கள் புதுமை இல்லை போலிகள் மலிந்து இருப்பதனால்
இரவுகள் உவர்க்க வில்லை கனவுகளில் மட்டும் நினைப்பவை நடப்பதனால்
சாகவில்லை உள்ளம் இறைவன் கூட இருக்கிறான் என்ற நம்பிக்கை நிரம்பி இருப்பதனால்
கருத்துகள்
கருத்துரையிடுக