வேதனைகளும் வலிகளும் தொண்டையில் சிக்க இதழ்களில் புன்னகை அரும்ப வையகத்திலே வலம் வரும் பலரில் ஒருத்தி இவள்...
நல்லவர் யார் கெட்டவர் யார் பாகுபாடு அறியாத அபலை இவள்...
அன்பான பேச்சு பண்பான நடத்தை கண்டவுடன் கலகலக்கும் கள்ளமில்லா உள்ளம் இவள்...
திரைமறைவில் ஒழிந்திருக்கும் முகமூடி முகங்களின் உண்மை அறியாமல் முகமன்கள் பரிமாறும் பேதை இவள்...
சதா சுழலும் சந்தர்ப்பவாதிகள் குழிபறிக்கக் காத்திருக்கும் துரோகிகள் தன்னலம் பேணும் சுயநலவாதிகள் அடையாளம் காணத்தெரியாத அறியாப் பெண் இவள்...
அன்பை அள்ளிக்கொடுத்து நிம்மதியைத்தேடும் நிலவின் தோழி இவள்...
நினைப்பது எதுவும் நடப்பதில்லை நடப்பது எதுவும் நம் கையில் இல்லை
தூரத்தே தெரியும் விடிவெள்ளி விடியலாக அமையுமா எதிர்ப்பார்ப்புடன் இவள்...!
கருத்துகள்
கருத்துரையிடுக