கலீபா ஹாருன் ரஷீத் தன்னுடைய இரு மகன்மார்களான அமீன் மற்றும் மஃமூனுக்கு ஆசிரியராக கிஸாயியை நியமித்தார். ஒழுக்க விழுமியங்களுடன் கல்வியைப் புகட்டுவதையே ஆசிரியர் கிஸாயிடம் கலீபா எதிர்பார்த்திருந்தார்.
அன்றொருநாள் கலீபாவின் வீட்டிலிருந்து ஆசிரியர் கிஸாயியை மாணவர்களுக்கான பாடங்களை முடித்துக்கொண்டு அவசர அவசரமாக வெளியேறிச் செல்லத் தயாரானார். உடனே மாணவர்களான அமீனும். மஃமூனும் தங்களது ஆசிரியரின் பாதணியை எடுத்துவந்து கொடுப்பதில் போட்டிபோட்டுக்கொண்டனர்.
இதனை தனது வீட்டின் மேல்மாடத்திலிருந்து கலீபா அவாதானித்துக்கொண்டிருந்தார்கள். விஷயத்தை நன்கு மனதில் நிறுத்திக்கொண்டார்கள்.
மறுநாள் கலீபா அவைக்குப் பிரசண்ணமானார். கிஸாயியும் சமூகமளித்திருந்தார். உடனே கலீபா அவர்கள்,
"கிஸாயி அவர்களே மனிதர்களில் கண்ணியத்துக்குரியவர் யார்?"
என்று வினவினார்.
"அதிலென்ன சந்தேகம் அமீருல் முஃமீனின்தான்" என்றார் கிஸாயி. உடனே கலீபா அவர்கள்
"அவ்வாறல்ல பாதணியை எடுத்துவந்து கொடுப்பதில் போட்டிபோட்டுக்கொண்ட அமீருல் முஃமினீன் இரு புதல்வர்களுமே மனிதர்களுள் கண்ணியத்துக்குரியவர்கள்" என்றார்.
A.B.M WASEEM (Naleemi)
கருத்துகள்
கருத்துரையிடுக