எமக்கான நேரத்தில்

"கோரோனா" போராட்டத்தின் கோரமுகம் சாதாரண மனிதாபிமான கோரிக்கைகள் கூட நிராகரிக்கப்பட்டு வீண்பழி சுமத்தப்பட்ட வீரியமான பரம்பல் காரணிகளாய் அடையாளப் படுத்தப்பட்டோம்.

அள்ளி அள்ளி அளவில்லாமல் கொடுத்தோம் நல்ல பல சேவைகள் செய்தோம். கண்டுகொள்ளாத ஊடகங்கள் சின்ன சின்ன விஷயங்கள் எல்லாம் ஊதி பெருப்பித்து ஊடரங்கு சட்டத்திற்கு அடங்காதவர்கள் என்று முத்திரை குத்தினார்கள் ஒன்றாய் போராடவேண்டிய போர் களத்தில் ஓரங்கட்டி என்னசெய்யப் போகிறார்களோ

பொறுமையாய் காத்திருப்போம் எமக்கான நேரத்தில் ..... சரியானதைச் செய்ய. சிந்தித்து செயல்பட்டால் நமக்கான தருணமிது. ...

நாச்சியாதீவு எம். சஹ்ரின் அஹமட்
yX Media - Monetize your website traffic with us Advertising that works - yX Media

கருத்துகள்