ஏன் இரவில் நின்று, வணங்க சந்தர்ப்பம் கிடைப்பதில்லை...?

எங்களால் இரவில் நின்று வணங்க முடியாமல் இருப்பதற்கு காரணம் என்னவென்று, இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், உங்களின் பாவங்கள் உங்களை எழும்ப விடாமல் உட்கார வைத்து விட்டனவா...? எனப் பகர்ந்தார்கள்.

நாங்கள் இரவில் நின்று வணங்க இயலாமல் போய் விடுகிறது. அதற்கான காரணத்தை, ஹஸனுல் பஸரி (ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள், உங்களின் பாவங்கள் உங்களை தொழுகைக்கு, எழும்ப விடாமல் முடிச்சுப் போட்டு விட்டன. எனக் கூறினார்கள்.

புழைல் பின் இயாழ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது; நீர் இரவில் நின்று வணங்கவும், பகலில் நோன்பு நோற்கவும், உன்னால் முடியாமல் போனால், வணக்கம் புரிய, நீ பாக்கியமற்றவன் என்பதை புரிந்து கொள்! உனது தவறுகள் (நின்று வணங்க விடாது) உன்னை கட்டிப் போட்டு விட்டன. (நூல் : லதாஇபுல் மஆரிப்f-1/46)

قيل لابن مسعود رضي الله عنه: ما نستطيع قيام الليل؟ قال: أقعدتكم ذنوبكم.

وقيل للحسن: قد أعجزنا قيام الليل؟ قال: قيدتكم خطاياكم.

وقال الفضيل بن عياض: إذا لم تقدر على قيام الليل وصيام النهار فاعلم أنك محروم كبلتك خطيئتك.

 لطائف المعارف ٤٦/١

ஐய்யூப் அப்துல் வாஜித் (இன்ஆமீ)

 

Advertising that works - yX Media Monetize your website traffic with yX Media

கருத்துகள்