காலம்

காலங்கள் காத்திருப்பதில்லை கனவுகள் நிஜமாக! கால்களும் விரைவதில்லை காரியத்தை நோக்கியதை!

முயற்சிகள் ஏதுமின்றி முளைகள் துளிர் விடா! முற்றுகைகள் பல தாண்டி முனைப்புடனே செயற்பட்டால் முன்னோக்கும் உன்னை பல வெற்றிக் கணைகள்

சாதாரண மனிதர்க்கும் இருபத்தி நான்கே! சரித்திரம் படைத்தவர்க்கும் இருபத்தி நான்கே!

அதை வகுத்தெடுக்கும் வகையதிலே பல ரகம்-பலர்க்கும் இலக்குதனை நாம் எய்த திட்டமின்றிச் பயணித்தால் திசை மாற நேரிடும்-இன்றேல் திரும்பிச் செல்ல நேரிடும்

பளுவான வேலை பல பஞ்சமின்றி எம்மை அடைய முன்னே பக்குவமாய்க் காலமதை வகுத்திட்டு நாமிங்கு பழிச்சொல்க்கு அஞ்சாது பயணிப்போம் அருளாளன் உதவியுடன்!

J.Noorul Shifa Jaffna SEUSL
yX Media - Monetize your website traffic with us Advertising that works - yX Media

கருத்துகள்