அங்கே தொலைபேசியைக் கையிலெடுத்தவள்,
''ஹலோ வினோத்.'' எல்லா விடயங்களையும் ஒன்றுவிடாமல் கூறிமுடித்தவள் அழத்தொடங்கினாள்.
''நா இப்பவே வாரன். தைரியமா இரு.'' மறுமுனையில் வினோத் பரபரத்தான். சற்று நேரத்திலேயே வந்த வினோத்,
''லட்சுமி.கார் எந்த பக்கம் போச்சு நீ வா.'' இருவருமாக காரில் சென்றனர்.
****************
விக்னேஷ் மின்னலென காரை ஓட்டியது கண்டு,
''டேய் கொஞ்சம் மெதுவா போ.'' கார்த்திக் கெஞ்சவும்,
''சரிடா மச்சான்.'' சிரிப்புடனே காரை சாலைவங்கில் திருப்பினான்.
''டேய்! டேய் என்னடா ஹாஸ்பிடல் இருக்கிறது அந்த வழிடா நீ என்ன?'' என்றவனுக்கு ஏதோ உறைத்தது.
பயங்கரமாகச் சிரித்தவன்,
''ஆமாடா ஆனா எங்க பழய பங்களா ஞாபகமிருக்கா ஒனக்கு.'' மீண்டும் சிரித்தவன்,
''அதே பழய வெறி இப்போ மறுபடி வந்தாச்சு.'' மனம் கலங்கப்பட்டவன் போல,
''விக்கி டேய் பாவம்டா பவி அவள விட்ருடா.'' கெஞ்சும் குரலில் கேட்டதும்,
''ஓ என்ன பாசம் பொங்குது. நல்லா கேட்டுக, அன்னைக்கு நீயும் சேர்த்து தா இவங்க அக்காவ, அதான் ஒன்னோட மூத்த மச்சினிச்சிய கில் பண்ணோம். இவ உயிரோடிருந்தா உனக்கும் தா ஆபத்து.''
''ஓஹ்.'' தலையில் கையை வைத்துக் கொண்டான் கார்த்திக்.
''ஆமாடா. எனக்கும் தா ஆபத்து ஆனா, இவளயும் நீ.''
''பேசிப் பேசி இருக்க டைம் இல்ல, இவள கூட்டிவா அவசரமா.''
கார் இருளடைந்த பகுதியில் நின்றது. பவித்ராவின் நிலை கண்டு பெருமூச்சு விட்டான் கார்த்திக்.
****************
''பவிய ஒருவேல கார்த்திக் சொன்னதுபோல ஹாஸ்டலுக்கு கொண்டு போயிருப்பாங்களோ?'' சந்தேகத்துடன் லட்சுமி கூறியதும், லேசான முறுவலுடன்,'
''அவனா? சான்ஸே இல்ல அவனுக மனித மிருகங்க அதுகெல்லாம் நோ சான்ஸ்.'' பெருமூச்சுடன் காரின் வேகத்தைக் கூட்டினான். லட்சுமிக்கு பயம் தொற்றிக் கொண்டது.
''அப்டீன்னா பவி?'' நடுங்கும் குரலில் கூறினாள் நித்யாவின் நண்பி.
கருத்துகள்
கருத்துரையிடுக