''என்ன நடக்குது இங்க!'' அதிர்ந்த லட்சுமியின் குரல் நடுங்கியது.
"ஓஹ் வட் த ஹெல்.''
வினோத் பவித்ராவை நோக்கி ஓடினான். அவள் மயக்கத்திலிருப்பதைக் கண்டு தண்ணீர் தெளித்து அவளை நினைவூட்டினான். அதிர்ந்து நின்ற கார்த்திக், சட்டென வினோத்தின் கால்களில் விழுந்தான்.
''என்ன மன்னிச்சுடுங்க... அவன்... விக்கி... பவிய கொல பண்ண...'' அவன் மேலும் பேசாமல் கையை நீட்டியவன் பவித்ராவின் அசைவை உணர்ந்து அவள் பக்கம் ஓடியவன்,
''ஒனக்கு... ஒனக்கு ஒன்னுமில்லயே...''
கலங்கிப் போயிருந்தான் அவன். லட்சுமி பவித்ராவை தாங்கிக் கொண்டாள். கண்களில் தீவிரத்துடன் கார்த்திக்கின் பக்கம் திரும்பி,
''டேய்... இப்ப தப்பிக்க நெனக்காத... பொலிஸ் வருது...''
கண்களில் ஈரத்தோடு பவித்ராவை நெருங்கியவன்,
''உங்கக்கா சாவுக்கு நானும் ஒடந்தயா இருந்திட்டன். ஆனா, ஒன்ன கொல்ல மனசு விடல. ஒன்ட கால புடிச்சி ஒன்னு கேட்டுகுறன். நா தா ஒங்கக்கா சாவுக்கு காரணம்னு கல்யாணிகிட்ட சொல்லாத பவி. அவ கலங்கி போயிருவா.'' அழுதவனை வெறித்துப் பார்த்தாள் பவித்ரா.
''டேய்... ஒனக்கெல்லாம் எதுக்கு இப்டி ஒரு வேசம் தூ...''
லட்சுமி அருவெருப்புடன் துப்பினாள். பொலீஸார் வரும் ஓசை கேட்டது.
''பிளீஸ்... பவி எனக்காக இத மட்டும் பண்ணு... அவ ஏ மேல வெச்சிருக்ற நம்பிக்கய ஒடச்சிடாத...''
கதறியவனை மீண்டும் வெறித்தாள். பொலிஸார் அவனை கைது செய்து கொண்டு சென்றனர். பவித்ரா தன்னருகே கிடந்த விக்னேஷின் உடலை ஒருகணம் வெறித்தவள்.
''ஏ அக்காவ கொண்ணவன் இப்ப எப்டி ஆகிட்டான் பாத்தீங்களா? ஒரு குடும்பத்தோட குத்து விளக்கயே ஒடச்ச படுபாவி...''
கண்களிலிருந்து கண்ணீர் மல்கக் கூறியவளையே இமைக்காது பார்த்துக் கொண்டிருந்தான் வினோத்.
முற்றும்.
கருத்துகள்
கருத்துரையிடுக