நீள்கிறது என் பாதை... நீ என்னுடன் இருந்த தருணங்களில் எல்லாம் உலகம் அறியாமல் வாழ்ந்து வந்தேன்!
பிரிவு என்னும் சுழற்காற்றால்! உனது உண்மை மனம் புரிந்து கொண்டேன்!
காதலில் இணைவும் காதலில் பிரிவும் சகஜம் என என உலகம் சொல்லும்! ஆனால் தன் காதலைத் தொலைத்த உள்ளத்திடம் கேள் அது உண்மை நிலை சொல்லும்!
நீ பேசிய வார்த்தைகள் எல்லாம் என் மனதில் செதுக்கள்களாய்... அதில் தூசு படியும் முன்னமே நீ பிரிந்து விட்டாய்... கவலைப் படாதே உன் நினைவுகள் எல்லாம் மாசு படாத உள்ளத்தில் தான் இருக்கிறது...
நீ அருகில் இருந்த பொழுதுகளில் என் விழிகள் மூடிக்கிடந்தன... என்று நீ சென்றாயோ அத்தருணமே நான் விழித்துக் கொண்டேன். கண்ணீரில் மிதக்களானேன் என் அருகில் நீ இல்லை!
தவிக்கும் என் உள்ளம் உன்னை விட யாருக்கு தான் புரியும்??? புரிந்திருந்தால் மீண்டும் என்னிடமே வந்து விடு... நீ என்னவன் எப்படி இருந்தாலும் ஏற்றுக்கொள்கிறேன்!
இந்த உலகில் வெறுத்த ஒருவரையே மறக்க முடியாத போது... பிடித்த உன்னை மறக்க முடியுமா? உள்ளம் தான் அதற்கு துணியுமா? இறந்து போகும் என் இதயம்
H.F.Badhusha SEUSL
கருத்துகள்
கருத்துரையிடுக