புது யுகம் காண்போம்

கொலைவெறிகொண்ட கொரோனா வைரசைக் கொண்டு வரக் கிடைத்தால்...

துவேஷத்தைக் கக்கும் துஷ்டர்கள்மேல் தூவிவிடலாம்.

கொடூர நெஞ்சம்கொண்ட கொள்ளைலாப வியாபாரிகள்மேல் கொட்டிவிடலாம்.

பொல்லாத மனம்கொண்ட போதைப்பொருள் வர்த்தகர்மேல் போட்டுவிடலாம்.

ஏழைகளைச் சுரண்டி வாழும் ஏமாற்றும் தலைவர்கள்மேல் எறிந்துவிடலாம்.

சொத்துக் குவிப்பதற்காய் சொந்தநாட்டைச் சுரண்டும் சுயநலக்காரர்கள்மேல் சொரிந்துவிடலாம்.

சாத்தியம் இவையென்றால் சுபீட்சமாகும் வாழ்க்கை சுதந்திரக் காற்று சுவாசிக்கக் கிடைக்கும்.

கலைமதி யாசீன்
Advertising that works - yX Media Monetize your website traffic with yX Media

கருத்துகள்