முதுகில் குத்தும் மானிடர்களையும் உணர்வுகளுடன் விளையாடும் உயிர்களையும் நன்றி மறந்து பேசும் நாவுகளையும் விடவா இந்த கொரோனா கொடுமையானது?
அது முன் பின் அறிமுகமற்ற ஒன்றாய் தீங்கு பயக்கின்றது. ஆனால் அவர்களோ கூடவே இருந்து கூடியிருந்து கதை பேசி குழிபறித்து முதுகில் குத்தும் மனித ஜென்மங்கள்.
அது வாழ்நாளில் ஒருமுறைதான். ஆனால் அவர்களோ வாழ்நாள் முழுவதும் கூடயிருந்து கூடியிருந்து உணர்வுகளுடன் விளையாடுகிறனர்.
உயிருக்கு ஒன்றென்றால் சுகப்படுத்த மருந்துண்டு உணர்வுக்கொன்றென்றால் சுகப்படுத்த மருந்துமில்லை
இவ்வாறான அவர்களை விடவா இந்த கொரானா கொடுமையானது?
மனிதத்தின் தேடலே என்னுள் இந்த கேள்வி... இந்த கேள்வியின் தேடலே இந்த வரிகள்...
தேடல் முடியாது போலும் நான் உட்பட இந்த வரியினை வாசிக்கும் ஒவ்வொரு உயிரும் மாறாத வரை...
மீண்டும் கேட்கிறேன்... அவர்களை விடவா இந்த கொரோனா கொடுமையானது..?
பின்த் யூசுப்
கருத்துகள்
கருத்துரையிடுக