கண்ணிமைத்திடும் நொடியில் அமைதியாய் வழிபாட்டில் இருந்த உயிர்கள் வெடிச்சத்தத்தில் என்னதென்று அறியாதே நீங்கிட..
மனிதம் மறைந்திட மிருகமாய் மாறி தாக்கியவன்.. அவன் மறந்து தான் போனானோ..
தான் தலையை வருடிச்சென்ற அந்த சிறகு விரித்திடா சிறு பறவையும் சிதறிடுமே என்றே..
வெடித்திச்சிதறிடப்போகும் உதிரம் அதே தான் என்னுள்ளும் ஓடுகிறது என்றே.. அந்த இதயம் அற்றவன் மறந்து தான் போனானோ..
ஒரு வருடம் இன்றோடு இருந்தும் இன்று போல் வலிக்கிறது இதயம்.. குருதியில் நனைந்த சுவர்களை பார்க்கையிலே.. காற்றில் கலந்த உயிர்களின் உணர்வு தீண்டையிலே..
இது போல் என்றுமே.. வரலாறு பேசிட நிகழ்வுகள் வேண்டாம்.. மனிதம் மட்டும் வாழட்டும் என்றும் இம்மண்ணில்.. இன மத பேதம் ஒழியட்டும் அந்த உயிர்கள் சென்ற வழி காற்றில் தேய்ந்தே..
கருத்துகள்
கருத்துரையிடுக